×

கொல்லிமலையை 2 ஆக பிரித்து செங்கரையில் புதிய போலீஸ் ஸ்டேசன் திறப்பு

சேந்தமங்கலம், மார்ச் 10: கொல்லிமலை அடுத்த செங்கரையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகமாக போலீஸ் ஸ்டேசன் செயல்பட தொடங்கியுள்ளது. கொல்லிமலை வாழவந்திநாட்டில் கடந்த 30 ஆண்டுக்கு மேலாக போலீஸ் ஸ்டேசன் செயல்பட்டு வருகிறது. சேந்தமங்கலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரின் கட்டுப்பாட்டில் இந்த போலீஸ் ஸ்டேசன் இயங்குகிறது. கொல்லிமலையில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. 14 நாடுகள் அமைந்துள்ளது. 60 கிலோமீட்டர் பரப்பளவில் கொல்லிமலை மலை கிராமங்கள் ஆங்காங்கே அமைந்துள்ளது. இங்கு புதியதாக ஒரு போலீஸ் ஸ்டேசன் அமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று செங்கரையில் ஒரு புதிய போலீஸ் ஸ்டேசன் அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, செங்கரை புதிய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடத்தில், தற்காலிக போலீஸ் ஸ்டேசனை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த போலீஸ் ஸ்டேசனுக்கு ஒரு எஸ்ஐ மற்றும் 18 போலீசாரை மாவட்ட எஸ்பி அருளரசு நியமித்துள்ளார். செங்கரை போலீஸ் ஸ்டேசனுக்கு கொல்லிமலையில் உள்ள 7 நாடுகள் மற்றும் அந்த நாடுகளில் அமைந்துள்ள 107 கிராமங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. செங்கரையில் அமைந்துள்ள புதிய போலீஸ் ஸ்டேசனும், சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டரின் கட்டுப்பாட்டில் செயல்படும். மாவட்டத்தில் ஏற்கனவே 26 போலீஸ் ஸ்டேசன்கள் அமைந்துள்ளன. தற்போது செங்கரை துவங்கப்பட்டுள்ளதன் மூலம் காவல் நிலையங்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Police Station ,Sengarai ,
× RELATED தேவர்குளம் காவல்நிலைய பிரச்சனை...